11 ஆகஸ்ட், 2010

வெட்டி பந்தா

பாசிடிவ் திங்கிங்க்
தைரியம்
அஃபிர்மேஷன்

மின்னல்

ஃப்லாஷை அனைக்க மறந்து
வானம் எடுக்கும் புகைப்படம்

ஹைக்கூ...

நவீன திருக்குறள்...

அவ்வளவு ஆழமில்லாவிட்டாலும்

அழகு...

19 ஜூலை, 2010

ப்லாஸ்டர் ஆப் பாரிஸ் வினாயகர்

நான் செய்த முதல் வினாயகர் சிலை...

3 ஜூலை, 2010

தேடல்...

முடிவில்லா அலைவரிசைகளின்

அணிவகுப்பு காற்றில்....

அளவில்லா வாகனங்களின்

அணிவகுப்பு வீதியில்....

கணக்கில்லா தூசுகள்...

விதவிதமான ஒலிகள்

காதில் ஒலித்தபடி...

எண்ணிலடங்கா

எண்ணங்கள் மனதில்...

அமைதி தேடி...

ஓடி ஓடி

சோர்ந்து... தளர்ந்து...

ஒரு நாள் வரும் அமைதி

அதுவரை ரசித்திருப்போம்

நம் ஆராவாரத்துடனேயான

அமைதியின் தேடலை....