19 ஜூலை, 2010

ப்லாஸ்டர் ஆப் பாரிஸ் வினாயகர்

நான் செய்த முதல் வினாயகர் சிலை...

3 ஜூலை, 2010

தேடல்...

முடிவில்லா அலைவரிசைகளின்

அணிவகுப்பு காற்றில்....

அளவில்லா வாகனங்களின்

அணிவகுப்பு வீதியில்....

கணக்கில்லா தூசுகள்...

விதவிதமான ஒலிகள்

காதில் ஒலித்தபடி...

எண்ணிலடங்கா

எண்ணங்கள் மனதில்...

அமைதி தேடி...

ஓடி ஓடி

சோர்ந்து... தளர்ந்து...

ஒரு நாள் வரும் அமைதி

அதுவரை ரசித்திருப்போம்

நம் ஆராவாரத்துடனேயான

அமைதியின் தேடலை....

மலர்..

உன் இதழ்களோரம்
ஈர மென்மை

பார்த்தவுடன் புத்துணர்வு

காய்ந்திடத்தான் போகிறோம்

எனத்தெரிந்தும் சுணங்காமல்

அழகை அள்ளித்தருகிறாய்...

வண்ணத்திலும் வாசத்திலும்

மனதை கொள்ளை கொள்கிறாய்...

இன்றலர்ந்த மலர் நீ

ஒர் ஆயிரம் அழகை

தோற்கடிக்கும் அரசி நீ

காலையில் பிறப்பும்

மாலையில் இறப்பும்

விரும்பி ஏற்கும்

அதிசய அழகி நீ...

உனை எங்கு பார்த்தாலும்

நின்று விடத்தோன்றுகிறது.

கண்களால் படம்பிடித்து

மனதில் பதித்து

பத்திரப்படுத்த...

எத்தனை முறை

கவி வார்த்தாலும்

போதாது போலவே

உன்னழகை அரைகுறையாய்

சொன்னது போலவே...

தவிப்புடன் நான்...

இயற்கையின்

பிரம்மிப்பில்

முதலிடம் உனக்கு....

கார்பன் மொனாக்ஸைடு...

இது ஒரு விஷ வாயு...வாகனங்களிலிருந்தும், ஜெனரேட்டர்களிலிருந்தும் பின் எங்கெல்லாம் பெட்ரொலியம் எரிகிறதோ அங்கு வெளிப்படும் புகையில் இது இருக்கும். 500 பகுதி காற்றில் ஒரு பகுதி (CO) கார்பன் மொனாக்ஸைடு இருந்தாலே அரைமணியில் உயிரைக்கொல்லும் ஆபத்தான வாயு இது.

இரத்த சிவப்பு அணுக்களில் ப்ராண வாயு (ஆக்ஸிஜென்) சேரவேண்டிய இடத்தில் இது சேர்ந்து உடலுக்கு ஊறு செய்யும். இந்த வாயு வின் அளவை சுற்றுப்புறத்தில் இருந்து குறைக்க ஹாப்சலைட் எனப்படும் ஒரு கலவை உதவுகிறது. மாங்கனைஸ், கோபால்ட், காப்பர், சில்வர் இவற்றின் ஆக்ஸைடுகள் கலந்த இக்கலவை கார்பன் மொனாக்ஸைடை உயிருக்கு ஆபத்தில்லாத கார்பன் டை ஆக்ஸைடாக மாற்ற வல்லது.

நெரிசலான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் இதனை வைப்பதால் விஷவாயுவின் அளவைக் குறைக்கலாம்.