படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 மே, 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம் - 2

சென்ற இடுகையில் இருந்த கேள்விகளுக்கு விடை...

அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?


டட்டுக்கு எலும்பு சுலபமாக முறியும் ஒரு வியாதி இருந்திருக்கிறது. அதனால் அவன் ஊன்று கோலின் துணையுடன் நடந்திருக்கிறான்.


டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

அந்த மம்மியை பரிசோதனை செய்தபோது, மலேரியா கிருமிகளின்
பாதிப்பு தெரிய வந்துள்ளது. அந்த காலத்தில் மலேரியாவிற்கு மருந்து இல்லை என்பதால் இறந்திருக்கிறான்.


டட் பற்றி இன்னும் சில செய்திகள் அறிய இங்கு கிளிக்குங்கள்: முதல் பாகம்

28 ஏப்ரல், 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம்

படிப்பதற்கு முன் ஒரு நிபந்தனை..
படிக்கும் போது உங்க மனசுல தோணுற சில வசனங்களும் அடைப்புகுறிக்குள்ள இருக்கும், அதெல்லாம் சரியான்னு கண்டிப்பா கருத்துரைல சொல்லனும்! இல்லன்னாலும் வேற என்ன தோணிச்சுன்னு சொல்லனும், சரியா? (அட கருத்துரை வாங்க இப்படி ஒரு புது ஐடியாவா? அவ்வ்...)


அம்மா எங்கள் டீச்சர் கொடுத்தாங்க, படிக்கிறாயா? என்று இரு மாத இதழ்களை நான் பார்த்துக்கொண்டிருந்த நாளிதழின் மேல் வைத்துவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கினான் என் மகன். அதில் வேகமாக விழிகளை ஓட்ட முதலில் கவனத்தை ஈர்த்தது 3000 ஆண்டுகள் முன்பு இறந்து போன அரசன் டட்டின்  மம்மி பற்றிய செய்தி தான். முன்பு பார்த்து மறந்து போன மம்மி படங்களின் காட்சிகள்  நினைவுக்கு வர படித்ததில், அதிலிருந்த மூன்று பக்க விஷயம் நிறையவே யோசிக்க வைத்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம். எதையும் முழுதாக தெரிந்து கொண்டு விட எப்போதும் போல் பற்றிக்கொண்ட ஆர்வம் மேலும் சில தகவல்களை தேடவைத்தது. அதில் கிடைத்த சுவரஸ்ய சங்கதிகள் சில உங்களுக்காக....


முன்பு என் பள்ளிப்பருவத்தில் முதன் முதலாக  மம்மிகளையும், பிரமிடுகளையும் பற்றி என் அப்பா விவரித்து சொன்னார்,...
ஒரு அரசன் இறந்து போனால் அவனுடன் சேர்த்து ஒரு ராணுவத்தையே கொன்று பதப்படுத்தி பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அவை இன்னும் கெடாமல் இருக்கின்றன என்று. ஒரு காவலன் இறந்து விட்டால் அது போல அரசனை கொன்று வைப்பார்களா என்று  நான் கேட்டது நினைவிருக்கிறது. (என்ன மொக்கை லாஜிக்!!!) எல்லா உயிர்களும் சரி சமம் தான்னு அன்னைக்கு தாங்க என் ஆசிரியை பள்ளியில் சொல்லியிருந்தாங்க ஹ ஹ. (என்னா கொல வெறீ !!!???!!!)

டட்டின் மம்மி இருக்கும் பெட்டி
சரி இனி அரசன் டட்டன்கேமன் பற்றி சில தகவல்கள்:
  • டட் அமர்னா என்ற எகிப்த்திய நகரத்தில் வளர்ந்தான்.
  • அப்போதைய எகிப்த்து அரசனான அவன் தந்தை டட்டின் ஒன்பது வயதில் இறந்து விட்டதால் அப்போதே அரசனாகி விட்டான்.
  • இவ்வளவு சிறிய வயதில் அரசனான டட்டுக்கு நாட்டை ஆள பெரியவர்களின் உதவி தேவைப்பட்டது.
  • டட்டின் செருப்பின் உள் பக்கத்தில் அவனுடைய எதிரிகளின் படங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. நடக்கும் போது மிதித்து கொல்வதாக நினைத்துக்கொள்வார்களாம்.
  • அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?
  • டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

இவற்றுக்கு விடையும், மேலும் சில ஸ்வாரஸ்ய தகவல்களையும் அடுத்த இடுகையில் தருகிறேன். (பெரிய மெகா சீரியலு!! தொடரும் போட்டிருக்காங்க!! ஆனாலும் படிக்க  நல்லாத்தான் இருக்கு!!) இல்லன்னாவது எழுதி தானே ஆகனும். எப்புடி?

12 ஏப்ரல், 2011

அன்புடன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டமா சேர்ந்து கும்மியடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அரசியல் விஷயங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் பெரியவங்க விஷயம்.
நான் எழுத நினைத்தது பிரபல தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் போல் நடித்து பேர் வாங்கி அசத்தி, கலக்கி சென்ற பலகுரல் மன்னர்களையும், காமெடி தீம் வின்னர்களையும் பற்றி. தொடர்ந்து சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், எந்த தலைப்பா இருந்தாலும் அதில் விஜயகாந்த் பேசுவது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ என்னவோ. அது இல்லாமல் போனால் நிகழ்ச்சியே ருசியில்லாமல் இருப்பது போல் பார்ப்பவருக்கும் பிரம்மை தோன்றும் அளவுக்கு விஜயகாந்தை ஆக்கிவிட்டனர். அடேயப்பா ஓட்டுவதற்கு தான் எத்தனை பேர் எத்தனை விதமான யோசனைகள். எல்லாம் சிரிக்க வைக்க.
இதே சிரிப்பு  நிகழ்ச்சிகளை யாரையும் புண்படுத்தாமல் செய்யவே முடியாதா என நிறைய யோசித்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் ஒருவர் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?  நானில்லாம ஒரு தீம் பண்ணமுடியுமா உங்களால? என் பேர் இல்லாம ஒரு காமெடி சீக்வன்ஸ் சொல்லுங்க பார்ப்போம் என்கிறார். அதற்கும் சிரிக்கிறோம்.
இப்போது கதையே வேறு. வழக்கமாக  நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும்  நண்பர் ஒருவர் இப்போது பார்ப்பதேயில்லையாம். ஏனென்று கேட்டதற்கு, அதுக்கு தான் அரசியல் செய்திகள் இருக்கே, அதை விட இந்த காமெடி சுவாரஸ்யமா இருக்கு என்கிறார். ரொம்ப வருத்தமாக இருக்கிறது.


பின் குறிப்பு:
நான் விஜயகாந்த் கட்சி அல்ல.

15 மார்ச், 2011

ஜப்பானின் பூகம்பம் - தப்பித்த பிஞ்சு குழந்தைகள்


 நம் கண்களில் நீரையும், இதயத்தில் வலியையும் உண்டு செய்த ஜப்பானின் பூகம்பம் மற்றும் அணு உலை வெடிப்பு, அந்த செய்திகளில் ஒரு அதிசயம்.  பிறந்து பத்து  நாட்களே ஆன குழந்தையும், ஒரு மூன்று மாதக் குழந்தையும் அந்த இடிபாடுகளில் உயிருடன் தப்பியது தான். பிறந்து 10 நாட்களில் பேரிடரில் காணாமல் போய் பின் கிடைத்த குழந்தையை பார்த்த தாயின் முகத்தில் தான் எத்தனை அமைதி. தப்பித்த இன்னொரு குழந்தைக்கு அதன் தந்தை வேறு பொருத்தமான பெயர் இவனுக்கு இல்லை என்று சொல்லி 'லக்கி' என பெயரிட்டிருக்கிறார்.  

26 ஜனவரி, 2011

ஓங்கி உரைத்திடும் இயற்கை

ஓய்வின்றி பாய்கிறது
வெள்ளி நீரோடை...
வெள்ளமாய் வீழ்கிறது
மலையருவி...
இருள்பொத்தி அமைதி
காக்கிறது கானகம்...
எல்லாம் கூடி
என்ன சொல்கின்றன?
தணிந்த அசைவுகள்
அன்பு பொங்கும் இதயம்,
சலனமில்லா மனம்,
திமிரும் பெருமிதம்,
ஒப்பிலா இயற்கையில்
எல்லாம் சாத்தியம்!

...இது நான் மிகவும் ரசித்த கவிதை

10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
  • தன்னை உணருதல் என்றால் என்ன?
  • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

  • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
  • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
  • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
  • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
  • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


  • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
  • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
  • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
  • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


    உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

    மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்



  • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    .
    மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.

13 செப்டம்பர், 2010

உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாரா?

அட இப்படி ஒரு கதையா? என்று நினைக்கவைத்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்...

மிஸ்டர் சங்கரனுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர் ஒரு பெரிய குல்லா வியாபரி. பரம்பரையாகவே சங்கரனின் குடும்பம் குல்லா வியபாரம்தான் செய்து வந்தார்கள். எனவே சங்கரனும் குல்லா வியாபாரமே செய்து வந்தார். அவரது தாத்தா குல்லா  விற்பனையில் தனது சாதனைகள், அனுபவங்கள், விற்பனை நுணுக்கங்கள் எல்லாவற்றையும் விரிவாக அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தார். எனவே சங்கரனும் தாத்தாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து குல்லா விற்பனை செய்து வந்தார்.

ஒரு முறை சங்கரன் ஒரு கிராமத்தில் குல்லா விற்றுவிட்டு அடுத்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். பாதி தூரம் செல்லும் போது ஒரே வெய்யிலாக இருந்ததால் ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு செல்ல தீர்மானித்தார். குல்லா மூட்டையை பாதுகாப்பாக அருகிலேயே வைத்துவிட்டு சற்று கண்ணயர்ந்தார். சற்று நேரத்துக்குப்பிறகு க்றீச் க்றீச் என்ற ஒலி அருகில் கேட்கவே திடுக்கிட்டு கண்விழித்தார். முதலில் மூட்டையை பார்த்தார் ஆ ஒரு குல்லாய் கூட மூட்டையில் இல்லை. அங்குமிங்கும் பார்த்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு கூட்டத்தை பார்த்து அசந்து போனார். ஒவ்வொரு குரங்கின் தலையிலும் ஒவ்வொரு குல்லாய். 

ஆனால் சங்கரன் அலட்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தாத்தா சொல்லி கொடுத்திருக்கிறார்.  நாம் செய்வதையே குரங்குகளும் திரும்ப செய்யும் எனவும் தலையில் உள்ள ஒரு குல்லாயை வைத்து எல்லாவற்றையும் திருப்பிவிடலாம் என நினைத்தார்.

மரத்தின் மேலிருந்த குரங்குகள் எல்லாம் அவரை பார்த்து பல்லை காண்பித்து இளித்துக்கொண்டிருந்தன.

'சிரிக்கிறீர்களா? முட்டாள் குரங்குகளே உங்களிடமிருந்து எப்படி குல்லாய் வாங்குவது என எனக்கு தெரியும்' என்று மனதிற்குள் சிரித்தவாரே தனது தலையிலிருந்த குல்லாயை தூரமாய் தூக்கி எறிந்து விட்டு அலட்சியமாக மேலே பார்த்தார்.

அட, இது என்ன, ஒரு குரங்கு கூட குல்லாவை தூக்கி எறியவில்லையே என்று நினைத்த போது ஒரு குட்டிக்குரங்கு மரத்திலிருந்து வேகமாக இறங்கி வந்து இவர் வீசி எறிந்த குல்லாவை எடுத்துக்கொண்டு மரத்தின் மேலேறிக்கொண்டது.

சங்கரனுக்கு ஒரே ஆச்சர்யம், என்னங்க ஆதி இப்படி ஆகிப்போச்சே! என்ன கொடும சரவணன் இது!  என்னங்கடா   இது புது தினுசா இருக்கு! உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்றெல்லாம் ரெடிமேட் வசனங்களுடன் அவர் அங்கலாய்க்கும் போது, இன்னொரு அதிர்ச்சி,
அந்த குட்டிக்குரங்கு பேசியது "உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தார்னு நினைச்சுகிட்டியா?"

11 பிப்ரவரி, 2010

வசூல்

ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வரிசையாக கார்கள் நின்றிருந்தன . கடைசியில் நின்ற கார்க்காரர் அந்த ப்பக்கம் சென்ற மனிதரை நிறுத்தி, " என்னாச்சு அங்கே?" என்றார்.
" நம்ம நாட்டுல உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் தீவிரவாதிகள் கடத்திடாங்க. நூறு கோடி ரூபா தரலைன்னா அவங்களை கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க. அதான் எல்லா காரையும் நிறுத்தி வசூல் பண்ணிக்கிட்டு இருக்கோம்." என்றார் அவர்.
"அப்படியா? இதுவரைக்கும் எவ்வளவு வசூல் ஆகியிருக்கு?"
"வெறும் பத்து லிட்டர் பெட்ரோல் தான்!"