காலை ஏழு மணி
காபி வாசனை
அம்மா கையில் என் காபி
காலை பதினொரு மணி
டீ வாசனை
அம்மாவின் கையில் என் டீ
மாலை நேரம்
டீ வாசனை
மணி நாலாகதான் இருக்கும்
வீட்டிலிருந்த அத்தனை நாட்களும்
இருபத்தோறு வருடங்கள் இப்படியே
நன்றி அம்மா
எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
28 ஜனவரி, 2010
27 ஜனவரி, 2010
தீராத விளையாட்டுப் பிள்ளை
அருகில் வந்து
ஆசையாய் ....
அம்மா...
இரு கரங்களாலும்
என் கன்னங்கள்
மென்மையாய்ப் பிடித்து
தலை தூக்கி
உன் அன்பு முத்தம் ...
ஆஹா எவ்வளவு
பாசமான பிள்ளை
இரண்டு வயதில்
எவ்வளவு தெளிவு
பிறரின் பாராட்டு
என்னை
மெய் மறக்கச்
செய்யவில்லை
உன் முத்தம் கூடத்தான்
எனக்குத்தானே தெரியும்
நீ அடுத்து செய்யபோகும்
பொல்லாத குறும்புக்கு
லஞ்சம் இதுவென்று
தீராத விளையாட்டுப் பிள்ளை
ஆம் அது நீயே... தான்
ஆசையாய் ....
அம்மா...
இரு கரங்களாலும்
என் கன்னங்கள்
மென்மையாய்ப் பிடித்து
தலை தூக்கி
உன் அன்பு முத்தம் ...
ஆஹா எவ்வளவு
பாசமான பிள்ளை
இரண்டு வயதில்
எவ்வளவு தெளிவு
பிறரின் பாராட்டு
என்னை
மெய் மறக்கச்
செய்யவில்லை
உன் முத்தம் கூடத்தான்
எனக்குத்தானே தெரியும்
நீ அடுத்து செய்யபோகும்
பொல்லாத குறும்புக்கு
லஞ்சம் இதுவென்று
தீராத விளையாட்டுப் பிள்ளை
ஆம் அது நீயே... தான்
முயற்சி
முயற்சி செய்வதும்
தோற்பதும்
ஏன் வெல்வதும் கூட
மிகச்சாதாரணம் தான்
அவை மற்றவர்களுக்கு
நிகழும்போது
முயற்சி செய்வதும்
தோற்பதும்
இடியாய் இறங்கும்
நமக்கு எனும் போது
நீ தனித்தீவில்லை
தோல்வியின் விளிம்பில்
திசை தடுமாறி நிற்க
இன்று வென்றவர்
கதை அநேகம்
அவர்கள் தழுவிய
தோல்விகள் ஏகம்
உன்னைத் தயார் செய்
வெல்வதற்கு
மனதையும்
அறிவையும்
உடலையும்
ஆன்மாவையும்
தயார் செய்
தனி ஒரு செல்லாக இருந்து
கருவறையில் வளர்ந்து
பின் பிறந்து
ஒரே வருடத்தில்
குப்புற படுத்து
மண்டி போடு
கை ஊன்றி
கால் பதித்து
தட்டு தடுமாறி நடந்து
பின் நன்றாகவும் நடந்து
பேசவும் கற்றுக்கொண்டு .....
உனக்கா முயற்சியில்லை?
எழு மனந்தளராதே
இன்னும் கொஞ்ச தூரம் தான்
வெற்றியை நெருங்க
வெற்றி உனக்கே!
தோற்பதும்
ஏன் வெல்வதும் கூட
மிகச்சாதாரணம் தான்
அவை மற்றவர்களுக்கு
நிகழும்போது
முயற்சி செய்வதும்
தோற்பதும்
இடியாய் இறங்கும்
நமக்கு எனும் போது
நீ தனித்தீவில்லை
தோல்வியின் விளிம்பில்
திசை தடுமாறி நிற்க
இன்று வென்றவர்
கதை அநேகம்
அவர்கள் தழுவிய
தோல்விகள் ஏகம்
முயல்வதும்
வெல்லும் வரை
அயராது முயல்வதுமே
வெற்றிக்கு விலாசம்உன்னைத் தயார் செய்
வெல்வதற்கு
மனதையும்
அறிவையும்
உடலையும்
ஆன்மாவையும்
தயார் செய்
தனி ஒரு செல்லாக இருந்து
கருவறையில் வளர்ந்து
பின் பிறந்து
ஒரே வருடத்தில்
குப்புற படுத்து
மண்டி போடு
கை ஊன்றி
கால் பதித்து
தட்டு தடுமாறி நடந்து
பின் நன்றாகவும் நடந்து
பேசவும் கற்றுக்கொண்டு .....
உனக்கா முயற்சியில்லை?
எழு மனந்தளராதே
இன்னும் கொஞ்ச தூரம் தான்
வெற்றியை நெருங்க
வெற்றி உனக்கே!
26 ஜனவரி, 2010
என் இனிய தோழி
பிறை நுதலாள்
வேல் கண்ணாள்
முல்லை புன்னகையாள்
கரும்பினிய மொழியாள்
வெல்லம் பொன்ற மனத்தினள்
சிந்தனை சொல் செயல்
யாவும் ஒன்றானவள்
நேர நிர்வாக ஆசிரியை
நிகழ்கால சாதனை மங்கை
உன்னிடம் கற்றுக்கொள்ள
ஏராளம் உண்டு
உன் தோழமை தரும் இதம்
சொல்ல வார்த்தைகளில்லை
உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உன் நட்பு
எங்கோ பார்த்தது போல்
ஒரு எண்ணம்
எப்போதோ பழகியது போல்
ஒர் நினைவு
கடவுளுக்கு நன்றி
நீ வாழ்வில் எல்லா நலமும்
பெற்று பல்லாண்டு வாழ
என் வாழ்த்துக்கள்
என் இனிய தோழி....... ஹேமா.
வேல் கண்ணாள்
முல்லை புன்னகையாள்
கரும்பினிய மொழியாள்
வெல்லம் பொன்ற மனத்தினள்
சிந்தனை சொல் செயல்
யாவும் ஒன்றானவள்
நேர நிர்வாக ஆசிரியை
நிகழ்கால சாதனை மங்கை
உன்னிடம் கற்றுக்கொள்ள
ஏராளம் உண்டு
உன் தோழமை தரும் இதம்
சொல்ல வார்த்தைகளில்லை
உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உன் நட்பு
எங்கோ பார்த்தது போல்
ஒரு எண்ணம்
எப்போதோ பழகியது போல்
ஒர் நினைவு
கடவுளுக்கு நன்றி
நீ வாழ்வில் எல்லா நலமும்
பெற்று பல்லாண்டு வாழ
என் வாழ்த்துக்கள்
என் இனிய தோழி....... ஹேமா.
இதழ்கள்
மென்மை
அழுத்தமான நிறம்
குவிந்திருக்கும் போதும் அழகு
மலர்ந்திருக்கும் போதும் அழகு
நாளெல்லாம் பார்த்துக்கொண்டெ
இருக்கலாம்
கைளிலும் அள்ளிச்செல்லலாம்
போகும் வழியெல்லாம்
நிறைந்திருந்தாலும்
காதலியே உன் முகத்தில்
இருக்கும் இதழ்களை
பார்த்து எத்தனை
போட்டியும் பொறாமையும்
அவற்றுக்கு
அழுத்தமான நிறம்
குவிந்திருக்கும் போதும் அழகு
மலர்ந்திருக்கும் போதும் அழகு
நாளெல்லாம் பார்த்துக்கொண்டெ
இருக்கலாம்
கைளிலும் அள்ளிச்செல்லலாம்
போகும் வழியெல்லாம்
நிறைந்திருந்தாலும்
காதலியே உன் முகத்தில்
இருக்கும் இதழ்களை
பார்த்து எத்தனை
போட்டியும் பொறாமையும்
அவற்றுக்கு
22 ஜனவரி, 2010
வெங்காயம்
ஆமாம்...
நான் ஒன்றுக்கும்
உபயோகம் இல்லை தான்
உரிக்க உரிக்க
ஒன்றுமே இல்லை தான்
ஆனால்
உரித்துக்கொண்டெ
நீ ஏன் அழுகிறாய் ?
நான் ஒன்றுக்கும்
உபயோகம் இல்லை தான்
உரிக்க உரிக்க
ஒன்றுமே இல்லை தான்
ஆனால்
உரித்துக்கொண்டெ
நீ ஏன் அழுகிறாய் ?
21 ஜனவரி, 2010
மம்மி நான் ரொம்ப பிஸி
ஹா ஹா
அருவி
ஓடி வந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள
அப்படி என்ன சோகம் உனக்கு?
ஓ உன் கடற்க் காதலனை காண
வேகமாக போகிறாயோ?
15 ஜனவரி, 2010
என் மகனின் விளக்கம்
தம்பி "அது குண்டூசி அதில் விளையாடதே"
"சரிம்மா அப்ப ஒல்லி ஊசியில் விளையாடலாமா?"
நான் சிரித்துக்கொண்டே
அதென்னடா ஒல்லி ஊசி?
ஆமாமம்மா தெரியாதா?
தலை குண்டாக இருந்தா அது குண்டூசி
அது ஒல்லியாக இருந்தா ஒல்லி ஊசி
அப்புறம்மா..... எனக்கு ஒரு சந்தேகம்
அது குண்டாகவே இல்ல
அப்புறம் ஏன் குண்டூசின்னு பேர் வந்தது ?
நான் சொன்னது தான் சரி
இல்லம்மா?
அதுவும் சரிதான்
குழந்தைகளிடமிருந்து
நாம் கற்று கொள்வது தான் அதிகம்
"சரிம்மா அப்ப ஒல்லி ஊசியில் விளையாடலாமா?"
நான் சிரித்துக்கொண்டே
அதென்னடா ஒல்லி ஊசி?
ஆமாமம்மா தெரியாதா?
தலை குண்டாக இருந்தா அது குண்டூசி
அது ஒல்லியாக இருந்தா ஒல்லி ஊசி
அப்புறம்மா..... எனக்கு ஒரு சந்தேகம்
அது குண்டாகவே இல்ல
அப்புறம் ஏன் குண்டூசின்னு பேர் வந்தது ?
நான் சொன்னது தான் சரி
இல்லம்மா?
அதுவும் சரிதான்
குழந்தைகளிடமிருந்து
நாம் கற்று கொள்வது தான் அதிகம்
8 ஜனவரி, 2010
மழலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)