19 நவம்பர், 2010

தியான லிங்கம்

தீராத தாகமும்
ஓயாத தேடலும்
எனை துளைத்தெடுக்கும்
கேள்விகளும்
ஏது செய்தாலும்
கிடைக்காத நிறைவும்
கணப்பொழுதும் நீங்காத
செய்ய வேண்டியதை
செய்யாமலிருப்பது போன்ற
குற்ற உணர்வும்
சதா எனை ஆட்டிப்படைக்க
என்ன தேடுகிறேன் என்ற
தெளிவே இல்லாமல்
தேடுவதும்
இங்கு தான் எங்கோ
இருக்கிறது வழி
தேடு தேடு என்று
மனம் கட்டளை இடுவதுமே
வாழ்க்கையாகி போனது
இவற்றிலிருந்து தப்பிக்க
நானாக இழுத்து
விட்டுக்கொண்டிருக்கும்
புதிய வேலைகளும்
சீக்கிரமே அவையும்
அலுத்து விடுவதும்
என்றுமே அலுக்காத
புத்தகம் படிக்கும்
பழக்கமும்
ஒவ்வொரு தேடலுக்கும்
முடிவுண்டு நிச்சயமாக
என்ற எண்ணமும்
வீண் போகவில்லை
கையில் கிடைத்தன
காட்டுப்பூ
அத்தனைக்கும்
ஆசைபடு
ஆயிரம் ஜன்னல்
எனும் நூல்கள்
தியான லிங்கத்தையும்
சத்குருவையும் பார்க்க
ஆவல் வந்தது
அதற்கான நேரமும்
கூடி வந்தது
என்னவோ விஞ்ஞானம்
எதுவோ என்னை ஈர்த்தது
தினம் ஒரு மணி நேரம்
போராடியபின் அடையும்
தியான நிலை
தியான லிங்கத்தின்
சன்னதியில்
இரு நிமிடங்களில்
கிடைத்தது
பேரமைதியும்
பயமேயில்லாத
மனமும்
என்னவோ ஒரு
அசெளகர்யமும்
சத்குருவின்
தரிசனத்தின் போது
உணர நேர்ந்தது
சந்தேகத்துடன் சில சமயம்
கண்மூடித்தனமாக சில சமயம்
கடவுள் பக்தி உள்ளதால்
கடவுளாக யாரையுமே
ஏற்றுக்கொள்வது
சாத்தியமேயில்லை எனக்கு
நல்ல ஒரு வழி காட்டியாக
உணர்கிறேன் த்குருவை

4 கருத்துகள்:

  1. Nalla marketing skills arindha sadguru ivar. Kadavulai nambum neengal innoru manidhanai een vahikattiyaaga erka vendum?oru sanyasikku edukku ivvalavu luxury?(Dyana lingam utpada)

    பதிலளிநீக்கு
  2. இதுக்கெல்லாம் லீவ்ல டைம் கிடைக்குதா? Good!

    பதிலளிநீக்கு
  3. கருத்துரைக்கு நன்றி பெயரில்லா!
    காவி உடை அணிந்து கயமைகளில் கடைத்தேறும் கள்வர்களின் மூலம் உண்டான அவ நம்பிக்கையும், ஜாக்கிரதை உணர்வும் நம்மில் பலருக்கு திக்குத்தெரியாத ஆன்மிக வழியில் பெரிய வேகத்தடை! அது எனக்கும் இருக்கிறது. அதையும் மீறிய ஒரு பாதுகாப்பு உணர்வும் இருக்கிறது. என் உள்ளுணர்வு என்னை ஏமாற்றியதே இல்லை. தேடுதலின் தீவிரத்தை குறைக்கவும் முடியவில்லை.
    புரியாத ஒரு பரிமாணத்தை புத்தகங்களிலிருந்தே புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். இப்போது தியானமும் உதவுகிறது.
    அவர் மார்கெட்டிங்க் தெரிந்தவராக இருப்பதால் தானே நாம் கணினியில் தியானலிங்கம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லை என்றால் வெள்ளியங்கிரி மலையில் ஏதோ ஓர் பாறையில் தியானத்தில் ஆழ்ந்து இருக்கும் முனிவர் ஒருவரை தேடி நாம் போகப்போகிறொமா என்ன?
    சரி குரு ஒரு மனிதன் என்பதால் தானே இவ்வளவு யோசனைகள் வருகின்றன?
    தியானலிங்கமே குருவாக செயல் புரிகிறது.
    எதையும் காரணமில்லாமல் நம்பும் அளவு என் தர்க்க அறிவும் இடம் கொடுக்கவில்லை தான்.
    அங்கு சென்று தியான லிங்க சன்னதியில் அந்த அதிர்வலைகளை உணர்ந்த பின் தான் நம்ப ஆரம்பித்தேன்.
    இரண்டாவது கேள்விக்கு பதில் மற்றவர் வாழ்க்கை யிலும் அவரவர் தேர்வுகளிலும் நான் கேள்வி எழுப்புவதில்லை. luxury என நீங்கள் சொல்வது போலில்லாமல் அவர் காவி உடை அணிந்து கையில் கமண்டலத்தோடு காட்சியளித்தால் நம்புவது சிரமமாயிருந்திருக்கும்!
    உருவத்தை பார்த்து எடைபோடுவதை விட அவரின் எழுத்துக்களில் இருக்கும் ஆழம் தான் எனை ஈர்த்தது.

    பதிலளிநீக்கு