3 ஜூலை, 2010

கார்பன் மொனாக்ஸைடு...

இது ஒரு விஷ வாயு...வாகனங்களிலிருந்தும், ஜெனரேட்டர்களிலிருந்தும் பின் எங்கெல்லாம் பெட்ரொலியம் எரிகிறதோ அங்கு வெளிப்படும் புகையில் இது இருக்கும். 500 பகுதி காற்றில் ஒரு பகுதி (CO) கார்பன் மொனாக்ஸைடு இருந்தாலே அரைமணியில் உயிரைக்கொல்லும் ஆபத்தான வாயு இது.

இரத்த சிவப்பு அணுக்களில் ப்ராண வாயு (ஆக்ஸிஜென்) சேரவேண்டிய இடத்தில் இது சேர்ந்து உடலுக்கு ஊறு செய்யும். இந்த வாயு வின் அளவை சுற்றுப்புறத்தில் இருந்து குறைக்க ஹாப்சலைட் எனப்படும் ஒரு கலவை உதவுகிறது. மாங்கனைஸ், கோபால்ட், காப்பர், சில்வர் இவற்றின் ஆக்ஸைடுகள் கலந்த இக்கலவை கார்பன் மொனாக்ஸைடை உயிருக்கு ஆபத்தில்லாத கார்பன் டை ஆக்ஸைடாக மாற்ற வல்லது.

நெரிசலான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் இதனை வைப்பதால் விஷவாயுவின் அளவைக் குறைக்கலாம்.

2 கருத்துகள்:

  1. ஓ! அப்ப‌டியா?
    ஏன் இதை ந‌க‌ராட்சிக‌ள் செய்ய‌வில்லை?

    பதிலளிநீக்கு
  2. கருத்துரைக்கு நன்றி வடுவூர் குமார், ஆனா பதில்
    தெரியலீங்கோ! மாட்டி விட்டுடுவிங்க போலிருக்கு! நான் இல்லிங்கோ!

    பதிலளிநீக்கு