தமிழில் ப்ளாக் எழுதுவது நீண்ட நாட்களாகவே இருந்தாலும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. படிப்பதோடு சரி. தமிழ் தட்டச்சு மென் பொருளும் தட்டும் முறையும் தெரியாது என்ற சாக்கு வேறு. புத்தகம் படிக்கும் பழக்கமும் நூலகம் செல்வதும் எனக்கு மிக மிக மிக பிடித்த விஷயங்கள். நிறைய படி, நீ ஒரு புத்தகம் எழுதவேண்டும் என மிகச்சிறுவதிலிருந்தே என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பார் என் அம்மா. இப்போது எழுதச்சொல்லி தூண்டியவர் என் ப்ரியமான தோழி...அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி!!!
என் மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டத்தில் தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை பிடித்துவிடும் அல்லவா? அதுபோல் அவரை பார்த்தவுடன் நீண்ட காலம் பழகிய ப்ரியமான தோழி போல் தோன்றியது. சரி என பேச ஆரம்பித்தால் அட நம்மை போலவே இவரும் சிந்திக்கிறாரே என தோன்ற ஆரம்பித்த பிரம்மிப்பு ஒன்றரை ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது. என்னை விட ஒரு படிமேல் என்று தான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதிலிருந்து நேர நிர்வாகம் வரை அவரிடமிரிந்து ஏராளமான விஷயங்கள் கற்று கொண்டிருக்கிறேன். எழுதுவதில் இயல்பாக விருப்பம் இருந்தாலும் எழுத என்ன இருக்கிறது என யோசித்து தயங்கி கொண்டிருந்தபோது, கூகுல் வழியான வலைதாவலில் தமிழ் மன்றம் எனும் வலைதளத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் குறிப்பாக (கீதம் அவர்களின் பின்னூட்டங்கள்) உற்சாகமும் அட நம்ம எழுத்தை கூட படிக்கிறார்களே என எண்ண வைத்தது. அந்த நேரத்தில் என் தோழி சிங்கையில் பொதுப்பிரிவு சிறுகதை போட்டி நடப்பதாகச் சொல்லி என்னையும் எழுதச்சொன்னார். தயங்கித் தயங்கி எழுதி அனுப்பினேன். அவரும் அனுப்பினார். எழுதி அனுப்பியதை மறந்ததாக சொல்லிகொண்டு பதில் வருகிறதா என தினமும் வீட்டு தபால் பெட்டியை முற்றுகையிட்டு கொண்டிருந்தேன். முத்தமிழ் விழாவே வந்து விட்டது இனி எங்கே நமக்கு பதில் வரப்போகிறது என அயர்ந்த சமயம், ஒரு நாள் மாலை நேரம் தோழியின் செல் அழைப்பு.... உங்கள் தபால் பெட்டியை பாருங்கள். எனக்கு பரிசு வந்துவிட்டது, உங்களுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும் என சொன்னார். வேகமாக போய் திறந்து பார்த்தில் ஆச்சர்யம் நிஜம் தான் எனக்கும் பரிசு கிடைத்துவிட்டது. சிறிது நேரம் நம்பவே முடியவில்லை. கிடைத்தது ஊக்கப்பரிசு என்றாலும் அது மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது. படிப்பில் முதல் மதிப்பெண் வாங்கி பரிசு பெறும் போது கூட அப்படி இல்லை. முதல் பரிசும் இரண்டாம் பரிசும் பெற்றவர்கள் ஏற்கனவே தங்கமுனைப்பேனா விருது பெற்ற எழுத்தாளர்கள். மற்ற நான்கு இடங்களில் எங்களுக்கு இரண்டு. முதல் கதைக்கே பரிசு என்பது ஒரு மாபெரும் வெற்றி என் கனிப்பில் (என் கதை தமிழ்மன்றம் வலைதளத்தில் சிறுகதை பகுதியில் இருக்கிறது). இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய என் ப்ளாக் இப்போது 100 இடுகைகள் முடிந்து 101 வது இடுகைக்கு வந்துவிட்டது. ப்ரியமுடன்......வசந்த் மற்றும் சி. கருணாகரசு இடும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருகிறது. என் தோழியின் ப்ளாக் லிங்க் ஐ அவரின் அனுமதி பெற்று பின்னர் இதில் பதிக்கின்றேன். வசந்த் என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்,
படிப்பது என்றாலே செய்தித்தாள் படிப்பது மட்டும் தான் என்று கொள்கை வைத்திருக்கும் என் ஹீரோ (என் கணவர்) என் பதிவுகளை படித்து உடனுக்குடன் அழைத்து பாராட்டும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நன்றி ஹீரொ!
அவரின் விருப்பப்படி வீடு முழுதும் கீதாச்சாரம்... வெறும் சுவற்றில் மட்டுமில்லாமல் வாழ்விலும் பின்பற்றும் அவர் மனதிலும்... என் 100 வது பதிவில் அவர் மனதோடு இணைந்த கீதாச்சாரம் இருக்கவேண்டும் என்பதால் பதித்தேன்.
என் ஆத்ம திருப்திக்காக எழுதுவதில் ஊக்கம் அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் கோடி!!!
உங்களுக்கு என் வாழ்த்துகள்! இன்னும் நிறைய எழுதுங்கள்.
பதிலளிநீக்குநன்றி HVL!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மேலும் எழுத!
பதிலளிநீக்குநன்றி Software Engineer!
பதிலளிநீக்குசதம் கடந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குநன்றி வழிப்போக்கன்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எழுதுங்க எழுதுங்க எழுதிட்டே இருங்க.....
பதிலளிநீக்குஹேய் சூப்பர் எஸ் அபிராமி இட்ஸ் கரெக்ட்...?
நன்றி வசந்த்!!
பதிலளிநீக்குஎஸ் இட்ஸ் கரெக்ட்!