விஜயகாந்தின் அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டமா சேர்ந்து கும்மியடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அரசியல் விஷயங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் பெரியவங்க விஷயம்.
நான் எழுத நினைத்தது பிரபல தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் போல் நடித்து பேர் வாங்கி அசத்தி, கலக்கி சென்ற பலகுரல் மன்னர்களையும், காமெடி தீம் வின்னர்களையும் பற்றி. தொடர்ந்து சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், எந்த தலைப்பா இருந்தாலும் அதில் விஜயகாந்த் பேசுவது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ என்னவோ. அது இல்லாமல் போனால் நிகழ்ச்சியே ருசியில்லாமல் இருப்பது போல் பார்ப்பவருக்கும் பிரம்மை தோன்றும் அளவுக்கு விஜயகாந்தை ஆக்கிவிட்டனர். அடேயப்பா ஓட்டுவதற்கு தான் எத்தனை பேர் எத்தனை விதமான யோசனைகள். எல்லாம் சிரிக்க வைக்க.
இதே சிரிப்பு நிகழ்ச்சிகளை யாரையும் புண்படுத்தாமல் செய்யவே முடியாதா என நிறைய யோசித்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் ஒருவர் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? நானில்லாம ஒரு தீம் பண்ணமுடியுமா உங்களால? என் பேர் இல்லாம ஒரு காமெடி சீக்வன்ஸ் சொல்லுங்க பார்ப்போம் என்கிறார். அதற்கும் சிரிக்கிறோம்.
இப்போது கதையே வேறு. வழக்கமாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும் நண்பர் ஒருவர் இப்போது பார்ப்பதேயில்லையாம். ஏனென்று கேட்டதற்கு, அதுக்கு தான் அரசியல் செய்திகள் இருக்கே, அதை விட இந்த காமெடி சுவாரஸ்யமா இருக்கு என்கிறார். ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
பின் குறிப்பு:
நான் விஜயகாந்த் கட்சி அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக