29 மார்ச், 2010

பிரபஞ்சம்

ஏதும் இல்லா
ஒன்றில்லிருந்து
எல்லாம் வந்தது

நினைத்து பார்க்க
முடியாத சின்ன
இடத்தில் தோன்றி

நினைத்து பார்த்து
பிரமிக்க வைக்கும்
பெரிய அளவில்
நம் பிரபஞ்சம்

தூசித் துகள்களின்
அடர்வில்
பறக்கும் சிறிய
தூசித்துண்டில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
சின்ன துளி நாம்

பிரமிக்க வைக்க
இயற்கை இருக்கிறது...

பிரமித்த படியே
நாம் இருப்போம்...

2 கருத்துகள்:

  1. /////தூசித் துகள்களின்
    அடர்வில்
    பறக்கும் சிறிய
    தூசித்துண்டில்
    ஒட்டிக்கொண்டிருக்கும்
    சின்ன துளி நாம்//////

    ஹ்ம்ம் ,,இப்பொழுதே ஞானி ஆகி விட்டீர்களோ???
    கவிதை நன்று! தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பாராட்டுக்கு நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு