10 பிப்ரவரி, 2010

நிலவு சொல்வதென்ன?

காலை ஐந்து மணி
பூங்கா
வானில் முழு நிலா

இருதினம் கழித்து
மாலை நேரம்
வானில் சற்றே
இளைத்த நிலா


பின் ஒரு நாள்
காலை நேரம்
வானில் பாதி நிலா


மற்றொரு நாள்
இரவு நேரம்
வானில் கீற்றாய் நிலா


வேறொரு நாள்
மாலை நேரம்
வானில் எங்கே நிலா?


அன்றொரு நாள்
அம்மாவின் மடியில்
அமர்ந்து
அது என்ன ம்மா?
அது தாண்டாக் கண்ணு
தங்க தட்டு....... நிலா....
அம்மா அறிமுகம் செய்த
அதே நிலா


உண்மையில் அது
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை


அறிவியல் தந்த அறிவில்
நிலா வேறு
முகத்தை காட்டியது


பின் எதற்கு தான்
பூமியை சுற்றி சுற்றி
வருகிறாய்?


நிலவிடமே கேட்போமே ....


நான் தினமொரு முறை
பூமியை சுற்றி வருகிறேன்
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தேய்கிறேன்
வாழ்வில் சோகங்களும்
வீழ்ச்களும் அநேகம்
இல்லாமல் போகிறேன்
எது வேண்டுமானாலும்
இல்லாமல் போகலாம்
வளர்கிறேன்
தோல்வியை
கண்டு துவளக் கூடாது
முயற்சியில்
வெல்வோம்
யாவற்றையும்
பிரகாசிக்கிறேன்
எல்லோரிடமும் பங்கு
போட வேண்டும்
இன்பத்தை

வாழ்க்கை மிகவும் சிறியது
வாழ்வதும் வீழ்வதும்
உன் கையில்

வாழவும் பழகு
தவறி வீழ்ந்தால்
முனகாமல்
எழவும் பழகு

வீழ்ந்ததை பாடமாகவும்
வாழ்வதை பீடமாகவும்
மாற்று .....

நிச்சயம் வெற்றி அடைவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக