பிறை நுதலாள்
வேல் கண்ணாள்
முல்லை புன்னகையாள்
கரும்பினிய மொழியாள்
வெல்லம் பொன்ற மனத்தினள்
சிந்தனை சொல் செயல்
யாவும் ஒன்றானவள்
நேர நிர்வாக ஆசிரியை
நிகழ்கால சாதனை மங்கை
உன்னிடம் கற்றுக்கொள்ள
ஏராளம் உண்டு
உன் தோழமை தரும் இதம்
சொல்ல வார்த்தைகளில்லை
உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உன் நட்பு
எங்கோ பார்த்தது போல்
ஒரு எண்ணம்
எப்போதோ பழகியது போல்
ஒர் நினைவு
கடவுளுக்கு நன்றி
நீ வாழ்வில் எல்லா நலமும்
பெற்று பல்லாண்டு வாழ
என் வாழ்த்துக்கள்
என் இனிய தோழி....... ஹேமா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக