முயற்சி செய்வதும்
தோற்பதும்
ஏன் வெல்வதும் கூட
மிகச்சாதாரணம் தான்
அவை மற்றவர்களுக்கு
நிகழும்போது
முயற்சி செய்வதும்
தோற்பதும்
இடியாய் இறங்கும்
நமக்கு எனும் போது
நீ தனித்தீவில்லை
தோல்வியின் விளிம்பில்
திசை தடுமாறி நிற்க
இன்று வென்றவர்
கதை அநேகம்
அவர்கள் தழுவிய
தோல்விகள் ஏகம்
முயல்வதும்
வெல்லும் வரை
அயராது முயல்வதுமே
வெற்றிக்கு விலாசம்
உன்னைத் தயார் செய்
வெல்வதற்கு
மனதையும்
அறிவையும்
உடலையும்
ஆன்மாவையும்
தயார் செய்
தனி ஒரு செல்லாக இருந்து
கருவறையில் வளர்ந்து
பின் பிறந்து
ஒரே வருடத்தில்
குப்புற படுத்து
மண்டி போடு
கை ஊன்றி
கால் பதித்து
தட்டு தடுமாறி நடந்து
பின் நன்றாகவும் நடந்து
பேசவும் கற்றுக்கொண்டு …..
உனக்கா முயற்சியில்லை?
எழு மனந்தளராதே
இன்னும் கொஞ்ச தூரம் தான்
வெற்றியை நெருங்க
வெற்றி உனக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக