பழைய சின்ன மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சீர் செய்ய கிளம்பினார்கள் அப்பாவும் இரு பிள்ளைகளும். கடையில் புதிய மிதிவண்டி வாங்கைக்கொள்ளுங்கள், பழையதை சரி செய்ய இதில் பாதி பணம் வந்துவிடும் என்று சொன்னதால் இரண்டையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தனர். சின்ன பிள்ளைக்கு ஏக கொண்டாட்டம். சரி பழைய வண்டியை இப்போது என்ன செய்யலாம் என நான் கேட்க, பெரிய மகன் உடனே நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தரும் இரு பிரபல நிறுவனங்களின் பெயரைச் சொன்னான். எதுக்கு டா அந்த பெயரையெல்லாம் சொல்ற என்றேன், இல்லம்மா அங்க சைக்கிளை கொடுத்தால் பணம் தருவாங்க.. என்றான்.
ஏன் ரொம்ப கவலையா இருக்கே?
எனக்கு பணம் வேணும்?
அதுக்கு தான் ‘-----‘ இருக்கே, கவலையவிடு!
என்பதான தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த குழந்தைகளை படுத்தும் பாடு அப்பப்பா...
சிரித்து முடித்து, அவனுக்கு விளக்கி முடித்தபின் ஒரே வருத்தமாகி விட்டது. ஒரு முறை பார்த்தாலே பதிந்துவிடும் குழந்தைகள் மனதில் பல முறை இது போல் பதியவைத்தால் விளைவு??
நல்ல கருத்து.... நிறைய எழுதுங்க.... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சி. கருணாகரசு!!
பதிலளிநீக்குஹா ஹா ஹா...
பதிலளிநீக்குபார்த்து பழக்கப்பட்ட நிகழ்வுகள் இன்னும் சுவரஸ்யமாக எழுதுங்கள்...
நன்றி வசந்த்!!
பதிலளிநீக்குஎங்க வீட்டிலேயும் இது நடந்திருக்கு. . . இதே விளம்பரத்துக்காக!
பதிலளிநீக்குநன்றி HVL, ஆச்சர்யமான ஒற்றுமை!
பதிலளிநீக்கு