22 ஜூன், 2010

அப்பா என்னும் ஓர் அன்புப்பொக்கிஷம்

சரி எது தவறெது
பிரித்து பார்க்க

பகுத்தறிவுக்கு

பிள்ளையார் சுழியிட்டது நீ

நிஜமெது நிழலெது

தலைகீழாய் பார்த்தாலும்

கண்டுணர கண்ணுக்கு

கற்றுத் தந்தது நீ

உண்மை எது பொய்மை எது

விளங்கித் தெளியும்

பக்குவம் சொன்னது நீ

வினாக்களின்

கூட்டுத்தொந்தரவு நான்

விடைகளின்

பிரதானக் களஞ்சியம் நீ

சளைக்காமல் முகம் சுளிக்காமல்

பதில்களை சொல்லி என்

அறிவுக்கு உரமிட்டது நீ

நீ அழுதால்

நான் அழுவேன் என

அழுவதையே

நிறுத்திக்கொண்டவன் நீ

உன் காலணியை

எனக்கணிவித்து

அக்கினி அணலில்

தீ மிதித்ததும் நீ...

அடைமழையில் குடை

எனக்குமட்டும் பிடித்து

பத்திரமாய் பள்ளியில்

எனைச்சேர்த்து

காய்ச்சலில் நொந்ததும் நீ...

ஏனோ உன்னை

ஒரு மனிதனாகவே

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை...

அப்பா என்றால் அன்பு..

அப்பா என்றால் சஞ்ஜீவி மலை..

அப்பா என்றால் பொக்கிஷம்..

அப்பா என்றால் அன்பின் ஊற்று..

அப்பா என்றால் அறிவின் சுடர்..

அப்பா என்றால் கணிவின் கருப்பொருள்..

அப்பா என்றால் கடவுள்..

இப்படியெல்லாம் தான்

என் மனதில் பதிந்திருக்கிறாய்...

அடுத்த பிறவி என்று

நமக்கு ஒன்று இருந்தால்

நீ எனக்கு மகனாக வா...

மாபெரும் இந்த

பிறவிக்கடனை

சிறிதேனும்

அடைக்க முடிகிறதா

பார்க்கிறேன்...

நீ என்றென்றும்

உளம் மகிழ

நலம் வாழ

உருகி வேண்டுகிறேன்

இத்தந்தையர் தினத்தில்

உன் மறுபிம்பமான

கடவுளிடம்...

9 கருத்துகள்:

  1. உங்கள் வரிகளில் ஒலிப்பது எனது குரல் ...
    ஒட்டு மொத்த குழந்தைகளின் குரலும் கூட ...
    நன்றிகள் தோழர் !

    பதிலளிநீக்கு
  2. வினாக்களின்

    கூட்டுத்தொந்தரவு நான்

    விடைகளின்

    பிரதானக் களஞ்சியம் நீ//

    மிக அருமைங்க கவிதை.

    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்!

    அப்பாவைப் பற்றிய கவிதை அருமை.

    பதிலளிநீக்கு