எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
14 ஜூன், 2010
சந்தியாக்காலம்
இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..
இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..
இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..
நகரும் கட்டடம் போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...
ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்..
ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...
மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..
எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...
நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...
அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...
காற்றும் இப்போது
சில்லென்று...
கண்களுக்கு
ரசனை
வரும்போது...
தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளியே போகும் போது கூட புத்தகமா? கொஞ்ச நேரமாவது அதுக்கு ரெஸ்ட் கொடுங்க. பிள்ளைங்க பாவம்!
பதிலளிநீக்குகண்டிப்பாக... நன்றி HVL!!!
பதிலளிநீக்குமிக ரசனையான பார்வை.
பதிலளிநீக்குநன்றி சி. கருணாகரசு!!
பதிலளிநீக்கு