2 ஜூன், 2010

நிறப்பாகுபாடு...

மலர்களையும் விட்டு
வைக்கவில்லை
நிறப்பாகுபாடு...

மனிதர்களிடமிருந்து
இன்னும் முழுமையாய்
விலகாமலே...

பூக்களிடம் தாவிவிட்டது...

உடைக்கேற்ற
வண்ணமென்ற பெயரில்...

கறுப்பு ரோஜா
பச்சை மல்லி
நீலச் சந்தனமுல்லை
எல்லாமே
சாத்தியம் இப்போது...

சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...

நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே...

2 கருத்துகள்:

 1. //நானும் அணிவேன்
  நிறம் மாற்றிய பூக்களை
  விருப்பமில்லாமலேயே...//

  சூப்பர்ப்...

  அட கவிதையும் நல்லா எழுதுறீங்களே...

  பதிலளிநீக்கு