நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வாழத்துடிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடம். பொதுவாக திரைப்படம் பார்ப்பது என்றாலே நேரவிரயம் என்றெண்ணும் என் போன்ற சிலருக்கும் இது பார்க்க வேண்டிய படம். நம்பிக்கை என்பது சூழலில் இல்லை எந்த நிலையிலும் நம் மனதில் நாம் பாதுகாத்து வைப்பது என்று தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். சென்னை சென்றால் பெரிய ஆளாய் வந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.
பெரிய கடைகளுக்கு சென்றால் அங்கு வேலை செய்பவர்கள் சரியாக கவனிப்பதில்லை என்ற குறை கூட இனி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. சக மனிதர்களின் வாழ்க்கை முறை கண்ணீர் வரவழைக்கிறது. சினிமாத்தனம் இல்லாமல் அறுவறுப்புக்காட்சிகள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வரும் அபூர்வங்களில் இதுவும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக