சோதனையாக நானும் உரை நடை எழுதி எல்லோரையும் ஒரு வழி பண்ணுவதாக முடிவு செய்து விட்டேன். படித்து
விட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள் (எல்லாம் ஒரு விளம்பரம் தான் :))
இல்லங்க அப்படியெல்லாம் பார்க்காதிங்க! இதுக்கு முன்னாடி ஒரு கதை எழுதி சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்துலருந்து (முத்தமிழ் விழா)
பரிசு கூட வாங்கியிருக்கேங்க. நிஜமாதான். ஆஸ்பிரின்லாம்
தேவையில்ல, தைரியமா படிங்க.
சரி சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நான் ஆச்சர்யபட்ட ஒரு சம்பவம் இது. பெரும்பாலும் பொண்ணு, பையன் யாராவது வெளிநாட்டுல இருந்தா இந்த அப்பா, அம்மாக்கள் விடும் ரவுசு தாங்காது. ஒரு முறை எப்பாடு பட்டாவது போய்ட்டு வந்து சொந்தங்கள் கிட்ட புகைப்படம் காட்டி வெறுப்பேத்துற பெத்தவங்க மத்தியில என்னை பெத்தவங்க ஒரு தனி ரகம். எங்க பொண்ணு வீட்டுக்கு போக சிங்கப்பூர் வேண்டியிருக்குமோன்னு 8 வருஷம் பாஸ்ப்போர்டே வாங்கலைனா பாத்துகோங்க. 9 தாவது வருஷத்துல எப்படியாவது வரவைக்கனும் னு வம்பு பண்ணி எல்லாம் தயார் பண்ணினோம். ஒரு வழியாக வந்து இறங்கினாங்க எஸ் க்யூ விமானத்துல. சரின்னு ஒவ்வொரு இடமா சுத்தி காட்டினோம். ராபிள்ஸ் மெர்லயனை பார்த்து ஃபூ இவளோதானான்னு சொல்லிட்டாங்க. சரி அதாவது பரவாயில்ல, 14 மாடி உயரம்ன்னு சொன்னே இது தம்மாத்தூண்டு நிக்குது, இதையா மின்னல் வந்து தாக்குச்சு பக்கத்துல இருக்குற கட்டடமெல்லாம் இதை விட உயரமா நிக்குது? அப்படின்னாங்க. அய்யோ அப்பா அது இதில்ல அது செந்தோசா வுல இருக்குன்னு சொன்னேன். அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே ன்னு அடுத்த கேள்வி.
லிஃப்ட் ல வரமாட்டேன் எங்கயாவது இடையில நின்னுடுச்சுன்னா என்னாகுறதுன்னு ஒரே வம்பு. ஆனா ஃபளையர் ல மட்டும் தைரியமா ஏறி சுத்தினாங்க ரெண்டுபேரும். எங்க அப்பா ஒரு என்சைக்ளோபிடியா, அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். அந்த காலத்து M. Sc Mathematics. டெக்னிக்கலா எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு கலக்குற ஆல் ரவுன்டர். அவங்க ரசிச்ச இடங்கள்னு சொன்னா டிஸ்கவரி சென்டர், சயின்ஸ் சென்டெர் தான். அங்க செய்தி வாசிக்குற செட்டிங்க் இருக்கும் நம்ம படிக்குறது விடியோ மிஃஸ் ஆகி அங்க உள்ள தொலைக்காட்சில ஒளிபரப்பகும். நிறைய பேர் உக்கார்ந்து படிக்க தயங்கியபடி நிற்க, எங்க அம்மா (அந்த காலத்து SSLC, ஆனா ஒரு புத்தகம் விடாம நிறைய படித்து நியாபகம் வைச்சிகிட்டு அப்பப்ப எங்களை அசத்துவாங்க GRE பரிட்சை வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் அவங்கள கேட்டுக்கலாம், இவங்க ஒரு லிவிங்க் டிக்ஷ்னரி) தயக்கமே இல்லாம நடந்து போய் செய்திகள் வாசிப்பது நீனா மெராட்டா (அம்மா அவங்க பெயர் தான் சொன்னாங்க நான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்) ன்னு ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்கு படிச்சு கலக்கிட்டாங்க. சில திறமைகள் எல்லாம் நம்ம அப்பா, அம்மா என்பதாலயே நம் கண்ணுக்கு தெரிவதில்லை. திரும்பி போகும் போது என்சைக்லோபிடியாவும், டிக்ஷ்னரியும் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க கேட்டா அசந்துடுவிங்க, அடுத்த முறை நாங்க வரனும்னா தரையோடு வீடு வாங்குங்க இந்த உயரத்துல தங்கறது எங்களுக்கு பிடிக்கலைனு!!! (எங்க வீடு ஆறாவது மாடில இருக்கு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக